Prabhu n Ferrari » DPDK

உண்ணாவிரதம்
வழக்கத்திற்கு மாறாக ஒரு சிறு கடிதம். தமிழக முதலைமைச்சரின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

கடலை பருப்பே,

சில நாட்களுக்கு முன்பு ‘உன் பொண்டாட்டி உன்னை எப்படி கூப்பிடுவா?’ என்ற  முக்கியமான கேள்விக்கு விடை காண நமது கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், நண்பர், மச்சி டிவி அதிபர், மச்சி இராமசாமி அவர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ பற்றி குறிப்பிட்டார். இனிமேல் மளிகை சாமான்களை கடனில் கொடுக்க மாட்டோம் என்று சீதாலட்சுமி ஸ்டோர்ஸ் முதலாளி முடிவு செய்து விட்டாரோ என்று பயந்து விட்டேன். பிறகு சுப்புணி ‘மத்திய அரசு சம்பந்தப்பட்ட விவகாரம்’ என்று கூறி என்னை சமாதானப்படுத்தினான்.

நாடளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘ஆம்’, ‘இல்லை’ என்று இரண்டு பொத்தான் அடங்கிய டப்பி வழங்கப்படுகிறது. இதை கேட்டதும் எனது இதயம் துடித்தது. அது எப்படி வெறும் ‘ஆம்’, ‘இல்லை’ என்று இருக்கலாம்? சங்க காலத்திலிருந்து ‘ஆமாம்ல’ என்று கூறும் தமிழன் என்ன செய்வான்? அவனிடம் சென்று ஆமாமா இல்லையா என்று கேட்டால் அவன் தடுமாற மாட்டானா? இதை ஏன் எவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? தமிழ் தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் ‘ஆம், இல்லை, ஆமாம்ல’ என்கிற முன்று பதில்களில் ஒன்றை தேர்வு செய்வதற்கு ஏற்ப, டப்பியை மாற்றி வடிவமைக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

எங்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தே.பொ.டி.க காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் என்று எச்சரித்துக்கொள்கிறேன். உண்ணாவிரதம் என்றதும் வேறு என்னவோ நினைக்க வேண்டாம். இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உண்ணாவிரதம்.  ஆகவே இதில் கலந்து கொள்ளுமாறு தன்மானம் மிக்க அனைத்து தமிழர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் ஒவ்வொரு முறை பாராளுமன்றத்தில் எதாவது பெரும் பிரச்சனை எழும்பொழுது சபாநாயகர் ‘Sine Die’ என்று கூறி அவையை தள்ளி வைக்கிறார். இனிமேல் அவையை தள்ளி வைக்கும் பொழுது ‘போடா டேய்’ என்று கூறி தள்ளி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடைசியாக எனது இந்த அறிவிப்பினை ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியின் நடுவே சொருகிட வேண்டாம் என்று தொலைகாட்சி நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கையில் நோட்டுடன்

-பிரபு

தமிழ் புத்தாண்டு
என் இனிய தமிழ் மக்களே

அனைவருக்கும் என் உளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம். விரைவில் சந்திப்போம்

கவிதை பாடு குயிலே
கடலை பருப்பே,

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கவிஞர் பட்டாளத்தை கையில் போட்டுக்கொண்டு ஏதோ தமிழ் உலகிற்கு பெரும் சேவை செய்வது போல் கபடநாடக வேஷமிடுகின்றன.

அந்த கட்சிகளின் முகத்திரையை கிழிக்க நமது கட்சியில் நண்பர் ‘திருட்டுமுழி’ அவர்கள் சேர்ந்துள்ளார் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இனி அவரை அனைவரும் ‘கவிஞர் திருட்டுமுழி’ என்றே அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கனிவான மொழியான தமிழில் கவிதை எழுதுவது கடினமோ இல்லையோ கவிஞர் பட்டம் வாங்குவது சுலபம் என்பதற்கு திருட்டுமுழியே சிறந்த எடுத்துக்காட்டு. இப்பொழுது நான் இவரை கவிஞர் என்று குறிப்பிட்டு விட்டேன்.  அது போதுமா இவரை கவிஞர் ஆக்க? ஆகவே ஒரு விழா எடுக்க வேண்டியதுதான். விழாவில் இவர் சில கவிதைகளை எடுத்துரைப்பார். அது போதாதா?

வீட்டுக்கு ஒரு கலர் டிவி. போல வீட்டுக்கு ஒரு கவிஞரை உருவாக்குவதுதான் திருட்டுமுழியின் வாழ்க்கை இலட்சியம். கவிஞராவது எப்படி என்ற பாடத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி  என்னிடம் இந்த மடலை கொடுத்தார். அதை உங்களுக்கு வழங்குகின்றேன். நீங்களும் கவிஞர் ஆகலாம்.

வணக்கம்

கவிஞர் எனப்படுபவன் கூறும் வணக்கம் மிக முக்கியமானது. அதுவும் வணக்கத்தில் ‘தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என் முதற்கண் வணக்கத்தைத்தெரிவித்துகொள்கிறேன்’  என்ற வாக்கியம் மிக முக்கியம்.

உதாரணம்:

‘தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என் முதற்கண் வணக்கத்தைத்தெரிவித்துகொள்கிறேன். தலைவா உனக்கு மாலைக்கண் வராமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

பாரதி

கவிஞர் என்பவன்(ள்) பாரதியை ஒருமையில் விளிக்காவிடால் மதிப்பு கிடையாது. என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை. பாரதி பெயர் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

உதாரணம்:

அன்றே சொன்னான் பாரதி

பாச்சா மாமா பேரு பார்த்தசாரதி

பொதுப்பிரச்சனை

மக்கள் மனதில் இடம் பிடிக்க பொதுப்பிரச்சனைகள் பற்றி அடிக்கடி பேச வேண்டும். பெரிசாக தேடி அலையவேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் பிரச்சனைக்கா பஞ்சம்?

உதாரணம்:

எங்க வூடு பக்கத்திலே பஸ் ஸ்டாண்டு

வாங்கிட்டு வாடா கொசுவத்தி ஸ்டாண்டு

அதே நேரத்தில் யாராவது உங்களை ‘பொது மக்களுக்கு என்ன தொண்டு செய்தாய்?’ என்று கேட்டால் ‘கவிதை எழுதினேன், பிரதமருக்கு கடிதம் எழுதினேன்’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். இப்பொழுது தமிழகத்தில் மழை பெய்கின்றது. உடனே ஒரு கவிதை எழுதினால் முடிந்தது நம் பங்கு.

இயற்கை செய்த பிழை

மார்கழியில் பெய்கிறது மழை

வாழ்த்து

கடைசியாக நன்றாக காக்கா பிடிக்க தெரிந்து இருக்க வேண்டும். அரசியல் தலைவர் பிறந்த நாள் பொழுது சில உளறல்களை வரிசைப்படுத்தி மடல் வாழ்த்து என்று அறிவிக்க வேண்டும்.

உதாரணம்:

கிழக்கே சூரிய உதயம்

தலைவர் ஜென்ம நட்சத்திரம் சதயம்

அவ்வளவுதான். இது போன்று அடிக்கடி உளறிக்கொண்டே இருந்தால் எவனும் சட்டை (இல்லை பனியன்) கூட செய்ய மாட்டான். நீங்களும் கவிஞர் ஆகலாம். நன்றி வணக்கம். அனைவரும் கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள்.

பி.கு. பாரதியை வம்புக்கு இழுத்தது அவரை கேலி செய்ய அல்ல. அவர் பேரை உபயோகப்படுத்தி ஆதாயம் தேடும் அற்ப மானிட பதர்களை கேலி செய்யவே. ஆகவே பாரதி ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

நண்பர் கோபாலின் பல்பொடியுடன்

-பிரபு

ஜனாதிபதி
கடலை பருப்பே,

இவ்வளவு நாட்களாக எங்கிருந்தேன் என்பதை இன்னொரு நாள் கூறுகிறேன். அதற்கு முன்னால் ஒரு முக்கியமான செய்தி. நமது நாட்டின் ஜனாதிபதியாக யார் வர போகின்றார் என்ற நிலையில், இதை பற்றி என்னுடய கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். சில நாட்களுக்கு முன் சோனியா காந்தி அவர்கள் போன் செய்தார்கள். சுப்புணி தான் பேசினான். பாடில்(Patil) அவன் காதில் பாட்டில்(Bottle) என்று விழுந்து விட்டது. பழைய பேப்பர் கடைக்கு வந்த ராங்க் நம்பர் என்று சுப்புணி போனை கீழேவைத்து விட்டான்.

அது மட்டுமில்லாமல் இந்த தேர்தலில் பெண்களுக்கு தான் என்னுடைய ஆதரவை தர வேண்டும் என்று என் கனவில் வந்த முன்னாள் கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரி கூறி விட்டாள் . எனவே ஷெகாவத் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்று வாஜபேயீ அவர்களுக்கு பே பே காட்டி விட்டொம்.

சரி. இப்பொழுது நமது வேட்பாளர் யார்? இந்த கேள்வியை நான் மெரினா பீச்சில் தனியாக அமர்ந்து மனசாட்சியுடன் கேட்டு கொண்டிருந்தேன். அப்பொழுது திடீர் என்று ஜாம்பஜார் ஜக்கம்மா என்ற பெண்மணி என்னருகில் வந்தார்கள். உடனே அவர்களையே நமது கட்சி வேட்பாளர் ஆக்கி விடலாம் என்று முடிவு செய்து சூட்டோடு சூடாக இந்த மடலை எழுதுகின்றேன்.

ஜனாதிபதி ஆவதற்கு ஜக்கம்மாவிற்கு என்ன தகுதி உள்ளது? அவர் ஒரு பெண். இந்திய நாட்டு குடிமகள். வேறு என்னய்யா தகுதி வேண்டும்? இருந்தாலும் தகுதி பற்றி கேள்வி கேட்கும் எதிர் கட்சி நண்பர்களுக்கு நான் கூறி கொள்வது என்னவென்றால்

‘யாரிடம் கேட்கிறாய் தகுதி? சொந்தமாக TV சேனல் வைத்திருக்கிறாயா? இல்லை ஒரு நியூஸ் பேப்பர் வைத்திருக்கிறாயா? ஊட்டியில் எஸ்டேட் வைத்திருக்கிறாயா? சுவிஸ் பாங்க்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறாயா? இல்லை ஆயுத பேர ஊழல் ஆசாமியுடன் தான் நட்பு வைத்திருக்கிறாயா? இவற்றில் ஏதவது ஒன்றிற்கு ஆம் என்று கூறி இருந்தால் அடுத்த தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இல்லையா? மானங்கெட்டவனே. யாரிடம் கேட்கிறாய் தகுதி.  ABCD  உங்கப்பன் தாடி வந்தா வாடி வராட்டி போடி’.

நாத்திக நண்பர்கள் கவலை பட வேண்டாம். ஜக்கம்மா அவர்கள் சளி பிடித்த போது கூட ஆவி பிடிக்கவில்லை என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்.  என்னே அவர் தியாகம். இடது சாரி நண்பர்கள் மீதும் நமது ஜக்கம்மாவிற்கு பெரும் அன்பு உண்டு. மூஞ்சில என் பீச்சாங்கையை வக்க, வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும் என்று தமிழில் அடிக்கடி கூறுவார். இடது(LEFT), சிகப்பு(RED) இவற்றை பற்றி கூறுகிறார். நாத்திகவாதிகளின் நண்பர். இது போறாதா இடது சாரிக்கு? வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது தன் கையால் பஜ்ஜி செய்து கொடுப்பார் நமது ஜக்கம்மா. மற்றும் அவர்கள் கையை குலுக்கி Hi, Hello, Bye என்று கூறி விடுவார்.  ஆகவே நான் கூற வருவதென்னவென்றால் அனைவரும் ஜக்கம்மாவிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கின்றேன். நன்றி வணக்கம்.

திருட்டு முழியுடன்,

பிரபு

பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கடலை பருப்பே,

பெங்களூர், மடிவாளா நான்காவது குறுக்கு சந்து மொட்டை மாடியில் காத்தாடி விடும் சங்கத்தில், நாளை என்னை பேச அழைத்து உள்ளனர். அந்த பேச்சின் எழுத்து வடிவை தங்களிடம் இணையதளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பெரியோர்களே, தாய்மார்களே, காத்தாடியை டீல் செய்யும் கில்லாடிகளே, எதிரிகளை ஆள் வைத்து அடிக்கும் குண்டர்களே, என் அன்பு தொண்டர்களே

அனைவருக்கும் என் எனிய போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். சமீப காலமாக நமது கட்சி தொண்டர்கள் ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்ற பழமொழியினை தவறாக புரிந்து கொண்டு மிகவும் குண்டாக மாறி விட்டனர். இதை பார்த்து எதிர்கட்சியினர் ‘உன் தொண்டர்கள் குண்டு நீ ஒரு மண்டு’ என்று பரிகாசம் செய்கின்றனர்.

இந்த நிலவரம் பெரும் கலவரமாக மாற கூடாது என்று அவசர அவசரமாக நண்பர் நச்சு நமச்சிவாயத்தை சந்தித்து விவரமாக எடுத்துரைத்தேன். அவர் கூறினார் ‘நீர் உமது தொண்டர்களை உடற்பயிற்சி செய், உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று கூறினால், எவனும் கேட்க மாட்டான். ஆகவே அவர்கள் அனைவரையும் பெங்களூர் வரச்சொல்லும். இங்கு இருக்கும் அழகான பெண்களை பார்த்து பெருமூச்செறிவான். பிறகு அவளை தள்ளிகொண்டுச் செல்லும் கூல் டூடைக் கண்டு வயிறெரிவான். உடலில் உள்ள கேலரிகள் அனைத்தும் எரியும், உடல் மெலியும்’.  ஆகவே நமது கட்சியில் தொகுதி வாரியாக ‘உள்ளூர் வயிற்றெரிச்சல் கோஷ்டி’ ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று இருக்கிறேன்.

நண்பர் நச்சு இன்னொரு விஷயத்தை கூறினார். அரசியலில் முன்னேற வேண்டுமானால், திரைப்படத்துறையை பற்றி அடிக்கடி ஏதாவது உளறிக்கொண்டு இருக்கவேண்டுமாம். நான் சிந்தித்து பார்த்தேன். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளை கேட்டு இருப்பாய். அதுபோல் நடிகை எம்மொழியாயினும் அவளை பார்த்து ஜொள்ளுவான் தமிழன் என்பதை நான் கண்டுப்பிடித்தேன். இப்பொழுது நாம் நடிகைகளை பல்வேறு விதமாக பிரிக்கலாம்.

1. குத்து ஆட்டம் நடிகைகள். மல்லிகா ஷெராவத், நமிதா போன்ற நடிகைகள் இந்த பிரிவில் வருவர்.

2. பீட்டர் விடும் நடிகைகள். த்ரிஷா, அஸின், ஷ்ரியா போன்ற நடிகைகள் இதில் உண்டு

3. அழுமூஞ்சி நடிகைகள். தேவயானி போன்ற நடிகைகள் இதில் அழுவர்.

இவர்களை எல்லாம் நமது கட்சி ஆதரிக்காது. மேக்கப் போடாமலே அழகாக இருக்கும் பிரியாமணி, கனிகா, கமலினி போன்ற நடிகைகளை ஆதரிப்போம். அதுவும் என்ன அழகாக பாடும் கனிகாவிற்கு தலைவரின் இதயத்தில் இடமளிப்போம். இவர்கள் அனைவருக்கும் தலா நான்கு படங்களில் வாய்ப்பளிக்குமாறு திரைப்படத்துறையினரை எச்சரிக்கின்றேன், நச்சரிக்கின்றேன்.

ஆகவே நான் கூற வருவதென்னவென்றால், ‘தமிழ் பண்டிகையான போகியை முன்னிட்டு தமிழகம் செல்லும் அனைத்து இரயில்களிலும் இரண்டு கூடுதல் போகியினை இரயில்வே வாரியம் இணைக்க வேண்டும்’. பேச வாய்ப்பளித்த மாஞ்ஜா மச்சிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

கையில் நூலுடன்

-பிரபு