ஆய்த எழுத்து படத்துல ஒரு நல்ல பாட்டு இருக்கு.
‘நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்,
உண்மை சொன்னால் நேசிப்பாயா’
இந்த பாட்டுல ஒரு வரி வரும்.
‘மனசெல்லாம் மார்கழி தான்,
இரவெல்லாம் கார்த்திகை தான்’. இதுக்கு என்ன அர்த்தம்?
கூகிள் பண்ணாதீங்க. படம் ரிலீஸ் ஆகச்ச நான் அடிச்ச டூப் தான் கிடைக்கும்
இப்போ யோசிச்சுப்பார்த்தா வேற அர்த்தம் புரியுது. தமிழ்நாடு மாதிரி உஷ்ண பகுதியில, மார்கழி மாசம் தான் கும்முனு இருக்கும். அதுமட்டுமிலாம, கார்த்தால பெருமாள் கோயிலுக்கு போனா, சுட சுட பொங்கல் கிடைக்கும். இதனாலதானோ என்னவோ, ‘மாதங்களில் அவள் மார்கழி’ அப்படின்னு பாட்டெல்லாம் இருக்கு. அதனால ‘மனசெல்லாம் மார்கழி’ அப்படின்னா, மனசு நெறஞ்சு சந்தோஷமா இருக்கற உணர்வா இருக்குமோ?
அப்புறம், மார்கழிக்கு முன்னாடி வர மாசம் கார்த்திகை. மார்கழி எப்போ வரும் அப்படின்னு ஒரு எதிர்பார்ப்போட இருக்கறதுனால, ‘இரவெல்லாம் கார்த்திகையா’? இல்லை, ராத்திரி முழுக்க விளக்க அணைக்காம, கார்த்திகை மாச அகல் விளக்கு போல பளிச்சுனு இருக்கறதுனால் ‘இரவெல்லாம் கார்த்திகையா’?



Well taking the situation in the movie into consideration, I guess the second one seems to be apt.
margazhi means kulir…. manasu kulirchi = refreshing joy.
karthigai = brightness…
In a single line , the girl says, u light up my heart with ecstasy.
Ethu epdi iruku ?
ஹையோ ஹையோ ..
இது எல்லாம் சரி ஆனால் “அழகிய தமிழ் மகன்” ல “மதுரைக்கு போகதடீ” பாடல் ல கூட இதே மாதிரி ஒரு வரி வருது..
“மார்கழின்னா ?” இதுக்கு பெண்களின் பதில் சிரிப்பு !!!!!
என்னவா இருக்கும் அர்த்தம்.. ?