Movie: Paarthale Paravasam
Singers: Srinivas, Sadhana Sargam
Lyrics: Vairamuthu
MD: ARR

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா? உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
(அன்பே)
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா