கடலை பருப்பே,

தேர்தல் அறிவித்தபின்பு அமைதியாக இருப்பது நல்லதல்ல. ஆகவே வழக்கம் போல வாக்குறுதிகளை அள்ளி வீச ஆரம்பிக்கிறேன்.

செம்மொழியாம் தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’. கழகம் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படும். காலை 8 முதல் 12 மணி வரை. 12 மணியில் இருந்து 3 மணி வரை மதிய உணவு உட்கொள்ளவும், சற்று இளைப்பாறவும் இடைவேளை. 3 மணி முதல் மாலை 7 மணி வரை மாலை மீண்டும் வேலை.

இப்பொழுது இருக்கும் நிலையில் மதிய நேரத்தில் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டு இருப்பர். இதனால் முதலாளிக்கும் இழப்பு. தொழிலாளிக்கும் இழப்பு. இதை ஈடு செய்யவே இந்த முடிவு.

தூக்க கலக்கத்துடன்
-பிரபு

பி.கு.
1. இடைவேளை நேரத்தில் தண்ணி போட கூடாது
2. மெகா சீரியல் பார்க்க கூடாது.