கடலை பருப்பே,
கட்சி பணியின் பொருட்டு, நான் பல முறை பல்வேறு நகரங்களுக்கு சென்றேன். அப்பொழுது நான் கவனித்த சில விஷயங்களை பற்றி பேசலாம் என்று எண்ணுகிறேன்.
சென்ற முறை நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரயில் மூலமாக பயணம் செய்ய நேரிட்டது.
வழக்கமாக அரை மணி நேரம் முன்பாகவே வரும் நான் இந்த முறை சரியாக இரயில் புறப்படும் நேரத்தில் வந்து சேர்ந்தேன். வந்து பார்த்தால் எனக்கு அருகாமையில் ஒருவர் அமர்ந்து இருந்தார். வலது பக்கத்தில் இரண்டு இளம் பெண்கள் அமர்ந்திருந்தனர். நாக்கை தொங்க போட வேண்டாம். மேட்டர் அதுவல்ல.
என்னுடைய இருக்கையின் மேல் வேறு யாரோ அவர்களுடைய பெட்டியை வைத்து இருந்தனர்.எனக்கு எங்கே வைப்பது என்று குழப்பம். தடுமாற்றம்.உடனே என் அருகில் அமர்ந்திருந்த டிப்-டாப் ஆசாமி, அந்த மகளிரை பார்த்து, ‘இது உங்களுடையதா’ என்று கேட்டார். அவர்கள் இல்லை என்று சொன்ன உடனே, அந்த பெட்டிகளை இறக்கி வைத்து என்னுடைய பெட்டியை மேலே வைத்தார். சிறிது நேரம் கழித்து ஒரு ஆள் வந்து கூப்பாடு போட்டார். அதாவது அவர் முன்னே வந்தாராம். ஆகவே பெட்டியை அங்கு வைத்தாராம். நல்ல கதை அய்யா. இரயிலில் இருக்கை மற்றும் பெட்டி வைக்கும் இடம் இரண்டுமே பதிவு செய்தவருக்கு சொந்தமானது என்று கூறி பார்தோம். அந்த ஆள் கேட்பதாக இல்லை. பிறகு TTR வந்து நாங்கள் சொன்னதையே வழி மொழிய, அந்த ஆசாமி செம்ம கடுப்புடன் சென்றார்.
இரயில் மற்றும் பஸ் பிராயணத்தில் இந்த தொல்லை பெரும் தொல்லை. ஒவ்வொருவரும் மூன்று நான்கு மூட்டை தூக்கி கொண்டு வருவர். இதனால் எல்லோருக்கும் பிரச்சனை. சில பேர் பஸ்ஸின் நடுவே இருக்கும் நடை பாதையில் தங்களுடைய பையை வைத்து விடுவர். பிறகு தூங்கி விடுவர். நடு ராத்திரியில் டீ காபி அருந்தவும், இளைப்பாறவும் ஒட்டுனர் வண்டியை நிறுத்துவார். அப்பொழுது எழாமல், சரியாக பஸ் கிளம்பும் நேரத்தில் பஞ்சதந்திரம் ஜெயராம் போல் ‘அய்யோ எனக்கு இப்போ தான் வருது’ என்று ஒடும் பேர்வழிகள் இந்த பை மற்றும் பெட்டிகள் மீது தடுக்கி விழுவதை பார்த்தால் பாவமாக இருக்கும்.
ஆகவே நான் கூற வருவது என்னவென்றால் தேவையான அளவு Luggage மற்றுமே எடுத்து செல்லவும். அவற்றை தங்களுடைய இருக்கை அருகிலேயே வைத்திருக்கவும். இல்லையென்றால் உங்களை பார்த்து ‘ நீயே ஒரு Luggage உனக்கெதுக்கு extra baggage? ‘ என்று கழக தொண்டர்கள் பாட நேரிடும்.

எவரவர் எங்கு சென்றாலும் Luggageஐ
ஸீட் அடியே தள்ளு

மடியில் கனமில்லாமல்
-பிரபு

kadalai paruppe,
katchi paNiyin poruttu, naan pala muRai palvaeRu nagarangaLukku sendren. appozhudhu naan gavaniththa sila vishayangaLai paRRi pesalaam enRu eNNugiRen.
sendRa muRai naan chennaiyil iru-ndhu bengaLoorukku irayil moolamaaga payaNam seyya naerittadhu.
vazhakkamaaga arai maNi neram munbaagavee varum naan indha muRai sariyaaga irayil puRappadum neraththil vandhu saerndhen. vandhu paarththaal enakku arugaamaiyil oruvar amarndhu irundhaar. valadhu pakkaththil iraNdu iLam peNgaL amarndhirundhanar. naakkai thonga pooda vaeNdaam. matter adhuvalla.
ennudaiya irukkaiyin mael vaeRu yaaro avargaLudaiya pettiyai vaiththu irundhanar.enakku enge vaippadhu enRu kuzhappam. thadumaatRam.udane en arugil amarndhirundha tip-top aasaami, andha magaLirai paarththu, ‘idhu ungaLudaiyadhaa’ endRu kaettaar. avargaL illai enRu sonna udanee, andha pettigaLai iRakki vaiththu ennudaiya pettiyai maele vaiththaar. siRidhu naeram kazhiththu oru aaL vandhu kooppaadu poattaar. adhaavadhu avar munne vandhaaraam. aagavee pettiyai angku vaiththaaraam. nalla kadhai ayyaa. irayilil irukkai matRum petti vaikkum idam iraNdume padhivu seydhavarukku sondhamaanadhu endRu kooRi paarthoam. andha aaL kaetpadhaaga illai. piRagu TTR vandhu naangaL sonnadhaiyee vazhi mozhiya, andha aasaami semma kaduppudan sendRaar.
irayil matRum bus praayaNaththil indha thollai perum thollai. ovvoruvarum moonRu naangu moottai thookki koNdu varuvar. idhanaal elloarukkum prachchanai. sila paer bus-in naduve irukkum nadai paadhaiyil thangaLudaiya paiyai vaiththu viduvar. piRagu thoongi viduvar. nadu raaththiriyil tea kaapi arundhavum, iLaippaaRavum oattunar vaNdiyai niRuththuvaar. appozhudhu ezhaamal, sariyaaga bus kiLambum neraththil panjathanthiram jeyaram poal ‘ayyoo enakku ippo dhaan varudhu’ endRu odum pervazhikaL indha pai matRum pettigaL meedhu thadukki vizhuvadhai paarththaal paavamaaga irukkum.
aagavee naan kooRa varuvadhu ennavenRaal thaevaiyaana aLavu matRume luggage eduththu sellavum. avatRai thangkaLudaiya irukkai arugileye vaiththirukkavum. illaiyendRaal ungaLai paarththu ‘ neeyee oru luggage unakkedhukku extra baggage?’ endRu kazhaga thoNdargaL paada naeridum.

evaravar engku senRaalum Luggage-ai
Seat adiye thaLLu

madiyil ganamillaamal
-prabhu