கடலை பருப்பே,

சட்டசபை தேர்தல் வரை எதையும் பேச வேண்டாம் என்ற ஒரு வைராக்கியத்தில் இருந்தேன். வைராக்கியத்தை மீறாத நீங்கள் எல்லாம் ஒரு அரசியல்வியாதியா என்று சுப்புணி திட்டி விட்டான். தேவ கவுடா மகன் போன்று சுப்புணி ஏதாவது காரியத்தில் இறங்கி விடுவானோ என்ற அச்சத்தில் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
நமது அன்பு தம்பி பிரவீன் இருக்கிறானே. அவனுக்கு அசாத்திய நகைச்சுவை உணர்வு உண்டு. அவன் எழுதும் பதிவுகளை பிள்ளைதாச்சி பெண்கள் படித்தால் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட சிரிக்கும்
அவன் எழுதும் பல பதிவுகளையும் நான் எழுதும் சில பதிவுகளையும் பலர் Copy-Paste செய்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பி விடுகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் சில பேர் மின் அஞ்சல் படித்த பின் பதிவு தளத்திற்க்கு வருகின்றனர். பிறகு என்னிடம் இந்த பதிவு சுட்ட பதிவா சுடாத பதிவா என்று வினா எழுப்புகின்றனர். அதை கேட்ட பின் மல்லிகா ஷெராவத்தை ஆடையுடன் பார்த்தது போல் அதிர்ச்சி அடைந்தேன். பொங்கி எழுந்தேன்.
ஏற்கனவே என்னுடைய பதிவுகளை பார்த்து பலர் இது என்னுடைய சொந்த கதையா என்று கேட்டு கலாய்க்கின்றனர். இது நானாக எழுதியது, ஆனால் இது என்னுடைய சொந்த கதை அல்ல என்று கூறி உயிர் போகிறது! சுப்புணி பயல் வேறு மகளிர் அணி தலைவி எங்கே எங்கே என்று கேட்டு படுத்துகிறான். இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே நான் எங்கிருந்து கட்சி பணியை பார்ப்பது?
சில நல்லவர்கள் எங்களுடைய பதிவு தளத்தை சேர்த்து அனுப்புகின்றனர். அவர்களுக்கு என்னுடைய இதயத்தில் இடம் உண்டு :-)

மற்ற சாவுகிராக்கிகளுக்கு இதை கூறி கொள்ள விரும்புகின்றேன்

  • லிங்க் கொடுக்காமல் copy-paste செய்யும் அற்ப மானிட பதரே
    உனக்கு வாழ்க்கையில் கிடைக்காது figurey
  • copy-paste செய்யும் மக்கு
    உனக்கு கன்னத்தில் விழும் டொக்கு
  • copy-paste செய்யும் female gender
    your husband will be like T Rajendar
  • செய்வியா copy-paste
    உன் வாழ்க்கை total-waste
  • இவ்வளவு கூறிய பின்பாவது Copy-Paste செய்யும் பொழுது லிங்க் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    சோற்றில் உப்புடன்
    -பிரபு

    kadalai paruppe,

    sattasabai therthal varai edhayum pesa veNdaam endra vairaakiyathil irundhen. vairaakiyathai meeRadha neengaL ellam oru arasiyalvyadhiya endru suppuNi thitti vitaan.deve gowda poandru suppuNi edavadhu kaariyathil iRangi viduvaano endra achchathil indha kadidhathai ezhudhugindren.
    namadhu anbu thambi praveen irukkiRaanee. avanukku asaaththiya nagaichchuvai uNarvu uNdu. avan ezhudhum padhivugaLai piLLaithaachchi peNgaL padiththaal avaL vayiRil irukkum kuzhandhai koodaa sirikkum.
    avan ezhudhum pala padhivugaLaiyum naan ezhudhum sila padhivugaLaiyum palar copy-paste seidhu min anjal moolamaaga anuppi viduginRanar.
    idhil kodumai ennavendraal sila paer min anjal padiththa pin padhivu thaLaththirkku varuginRanar. piRagu ennidam indha padhivu sutta padhivaa sudaadha padhivaa enRu vinaa ezhuppuginRanar. adhai kaetta pin mallikaa sheravathai aadaiyudan paarththathu poal adhirchchi adaindhaen. pongki ezhundhaen. yerkanavae ennudaiya padhivugaLai paarththu palar idhu ennudaiya sondha kadhaiyaa enRu kaettu kalaaikkinRanar. idhu naanaaga ezhuthiyadhu, aanaal idhu ennudaiya sondha kadhai alla enRu kooRi uyir pogiRadhu! suppuNi payal vaeRu magaLir aNi thalaivi enge enge enRu kaettu paduththugiRaan. ivvaLavu pirachchanaigaLukku naduve naan engirundhu katchi paNiyai paarppadhu?
    sila nallavargaL engaLudaiya padhivu thaLaththai serththu anuppuginRanar. avargaLukku ennudaiya idhayaththil idam uNdu.

    maRRa saavukirakikaLukku idhai kooRi koLLa virumbuginRaen

  • link kodukkaamal copy-paste seyyum aRpa maanida padharee
    unakku vaazhkkaiyil kidaikkaadhu figurey
  • copy-paste seyyum makku
    unakku kannaththil vizhum dokku
  • copy-paste seyyum female gender
    your husband will be like T Rajendar
  • seyviyaa copy paste
    un vaazhkai total waste
  • ivvaLavu kooRiya pinbaavadhu copy paste seyyum pozhudhu link kodukkumaaRu kaettukoLgiReen

    soatRil uppudan
    -prabhu