கடலை பருப்பே ,

சில நாட்களுக்கு முன் நான் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருந்த பொழுது ஒரு விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பெண்களின் விடுதிக்குள்ளே ஒரு வாலிபன் டமால் என்று புகுந்து fair and lovely fairness cream ஐ திடீரென்று திருடுவான். இதை பார்த்த பெண்கள் குபீரென்று சிரிப்பர். சிகப்பாக அழகாக இருக்க வேண்டும் என்பது அந்த வாலிபனின் விருப்பமாம். பிறகு விளம்பர அறிவிப்பாளர் கூறுவார். மாமிகள் போட்டுக்கொள்ளும் இமாமி சாதா ஆசாமிக்கு உதவாதாம். காரணம் ஆண்களின் தடிமனான சருமம். ஆகவே ஆண்களுக்காக பிரத்யேகமாக ஒரு fairness cream ஐ இமாமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதாம்.
Fair ஆக இருப்பதினால் ஒருவர் அழகாகிவிட முடியுமா? அப்படி பார்த்தால் பிரசாந்த் தேவயானி போன்றவர்கள் அழகா? Hollywood நடிகர் Will Smith கருப்பு தான். நந்திதா தாஸ் கருப்பு தான். அவர்களுக்கு என்ன குறைச்சல்?
கருப்பே அழகு காந்தலே ருசி என்று முன்னோர்கள் கூறி உள்ளனர். இவ்வளவு ஏன். நமது சிறுவர் அணி தலைவர் மூக்கொழுகி சுப்புணி கூட கருப்பு தான். அவர் அந்த ரெட்டை ஜடை ஜானகியை correct செய்யவில்லையா?
இது மட்டுமல்ல. Gillette நிறுவனத்தின் ஒரு விளம்பரம் வேடிக்கையாக இருக்கும். ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் ஆனந்த நடனமாடிக்கொண்டிருப்பர். அப்பொழுது ஒரு பெண் ஒரு ஆணின் அங்கவஸ்திரத்தை எடுத்து அவனது முகத்தில் விளையாட்டாய் தேய்த்து விளையாடுவாள். அப்பொழுது அவனது கன்னம் சொரசொரப்பாக இருக்கும் என்று அந்த பெண் அருவருப்பை தெரிவித்து விட்டு Gillette Razor ஆல் shave செய்த ஓர் ஆணை தேடி போவாள். காரணம் அவனது கன்னம் மழ மழ என்று இருக்குமாம். இது போன்று பல அழகு குறிப்பு நிருவனங்கள் இன்று நமது நாட்டில் உள்ளன. இவை ஒழிந்தால் தான் மக்களுக்கு நிம்மதி.
அந்த காலத்தில் காந்தியடிகள் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடை பெற்றது. நமது கழகத்தின் சார்பாக அழகு குறிப்பு நிறுவனங்களே வெளியேறு என்ற போராட்டத்தை தொடங்குவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

-தலையில் எண்ணையுடன்
பிரபு

kadalai paruppe,

sila naatkaLukku mun naan tholaikaatchi nigazhchigaLai paarthu rasithu koNdirundha pozhudhu oru viLambaraththai paarthu adhirchi adaindhaen. peNgaLin vidudhikuLLe oru vaaliban damaal endru pugundhu fair and lovely fairness creamai thiruduvaan. idhai paartha peNgaL gubeerendru sirippar. sigappaaga azhaghaaga irukka veNdum enbadhu andha vaalibanin viruppamaam. piRagu viLambara aRivippaaLar kooRuvaar. maamigaL poattukoLLum emami saadha aasamikku udavaadham. kaaraNam aaNgaLin thadimanaana sarumam. aagave aaNgaLukkaaga pratheygamaaga oru fairness cream ai emami niRuvanam aRimuga paduththi uLLadhaam.
fair aaga iruppadhinaal oruvar azhaghaagi vida mudiyumaa? appadi paarthaal prashanth devayani poandravargaL azhaghaa? Hollywood nadigar Will Smith karuppu dhaan. nandita das karuppu dhaan. avargaLukku enna kuRaichchal?
karuppe azhaghu kaandhale rusi endru munnoargaL kooRi uLLanar. ivvaLavu yaen. namadhu siRuvar aNi thalaivar mookozhughi suppuNi kooda karuppu dhaan. avar andha rettai jadai janaki ai correct seyyavillaya?
idhu mattumalla. Gillette niruvanaththin oru viLambaram vaedikkaiyaaga irukkum. oru thirumaNa nigazhchiyil aaNgalum peNgalum aanandha nadanamaadi koNdiruppar. appozhudhu oru peN oru aaNin angavasthiraththai eduthu avanadhu mugaththil viLayaattai theythu viLayaduvaaL. appozhudhu avanadhu kannam sorasorappaaga irukkum enRu andha peN aruvaruppai therivithu vittu Gillette Razor aal shave seidha oar aaNai thedi poavaaL. kaaraNam avanadhu kannam mazha mazha endru irukkumaam. idhu poandru pala azhagu kuRippu niruvanagaL indru namadhu naatil uLLana. ivai ozhindhaal dhaan makkaLukku nimmadhi.
andha kaalathil gandhiyadigaL thalaimayil veLLayane veLiyeru poarattam nadaipetradhu. namadhu kazhaghathin saarbaga azhagu kuRippu niruvanangaLe veLiyeRu endra poarattathai thodanguvoam enbadhai theriviththu koLgiren.

-thalaiyil eNNayudan
Prabhu